நுவரெலியாவில் மாத்தளையிலிருந்து வரகாமுர நோக்கிப் பயணித்த கார் ஒன்று எதிர்திசையில் பயணித்த மோட்டார் சைக்கிளுடன் நேருக்கு நேர் மோதி இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
கொஹொம்பிலிவல பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.
விபத்தின் போது, மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் மற்றும் யுவதி காயமடைந்த நிலையில் மாத்தளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளனர்.
26 வயதுடைய இளைஞரும் 32 வயதுடைய யுவதியுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
விபத்துக்குள்ளான காரில் பயணித்த இளைஞர்கள் இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.