திருத்தப்பட்ட தனது காணொளியைப் பயன்படுத்தி இணைய வழியில் மோசடி இடம்பெறுவதாக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் அஞ்சலோ மெத்யூஸ் தெரிவித்துள்ளார்.
பந்தயம் பிடிக்கும் விளையாட்டை விளம்பரப்படுத்துவதற்காக குறித்த காணொளி பயன்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தனது உத்தியோகபூர்வ எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் முன்னணி தொலைக்காட்சி வலையமைப்பிலிருந்து எடுக்கப்பட்ட தனது திருத்தப்பட்ட காணொளியை குறித்த நபர்கள் அவர்களுக்கு சாதகமாகப் பயன்படுத்தியுள்ளதாக அஞ்சலோ மெத்யூஸ் தெரிவித்துள்ளார்.
மேலும் இது தனது நற்பெயருக்குக் களங்கத்தை ஏற்படுத்தும் ஒரு முயற்சி எனவும் குறித்த செயற்பாடு முற்றுமுழுதான மோசடி எனவும் அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் இது தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறைபாடு செய்யவுள்ளதாகவும் அஞ்சலோ மெத்யூஸ் தெரிவித்துள்ளார்
This is an absolute Scam. A malicious attempt at cheating people and tarnishing my reputation. These scammers are using a edited video from a leading tv network !
Please report such activity and alert the authorities on same. I will be reporting this to the relevant authorities ! pic.twitter.com/zEcxaYyQBC— Angelo Mathews (@Angelo69Mathews) April 11, 2024