நாடாளுமன்ற உறுப்பினர் மொஹமட் பைசலின் கார் சாரதி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் இன்று சனிக்கிழமை மாரவில நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன்படி அவரை எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.