மொனராகலையில் கஞ்சா போதைப்பொருளுடன் இருவர் கைது

மொனராகலை, தணமல்வில பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அங்குணுகொலபொலஸ்ஸ பிரதேசத்தில் கஞ்சா போதைப்பொருளுடன் இரண்டு சந்தேக நபர்கள் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் நேற்று செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஜூலம்பிட்டிய மற்றும் தணமல்வில ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 22 மற்றும் 39 வயதுடைய இருவரே கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் ஒருவரிடமிருந்து 02 கிலோ கிராம் கஞ்சா போதைப்பொருளும் மற்றையவரிடமிருந்து 01 கிலோ 600 கிராம் கஞ்சா போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

Shanakiya Rasaputhiran

இதனையடுத்து, சந்தேக நபர்கள் இருவரும் மேலதிக விசாரணைகளுக்காக தணமல்வில பொலிஸ்  நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தணமல்வில பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

Poineer Hospital Owner
Jana Uncle Post Ad