மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் பாதுகாப்பைப் பலப்படுத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தையடுத்து இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் பதில் தலைவர் நீதிபதி மொஹமட் லபார் தாஹிர் தலைமையில் இன்று நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தைத் தொடர்ந்து இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது.
மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்குள் பிரவேசிக்கும் அனைத்து சட்டத்தரணிகளும் மற்றும் தனிநபர்களும் நீதிமன்ற நுழைவாயிலில் நிறுவப்பட்டுள்ள ஸ்கேனர் இயந்திரத்தைக் கடந்து நீதிமன்ற வளாகத்திற்குள் செல்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.