குழந்தையை கொடூரமாக தாக்கிய தந்தை ஒருவர் எல்பிட்டிய பொலிஸாரால் நேற்று புதன கிழமை இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.
ல்பிட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அனுருத்தகம கரந்தெனிய பிரதேசத்தில் 3 வயது 6 மாத ஆண் குழந்தை ஒன்றே இதன் போது பாதிக்கப்பட்டுள்ளது.
கரந்தெனிய, அனுருத்தகம பிரதேசத்தில் வசிக்கும் 24 வயதுடைய சமையல்காரராக பணி புரியும் குழந்தையின் தந்தையே இதன் போது கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரின் 24 வயதுடைய மனைவி தொழில் நிமித்தம் வெளிநாடு சென்றிருந்த நிலையில், சந்தேக நபரும் குழந்தையும் மட்டுமே வீட்டில் இருந்துள்ளனர்.
சந்தேகநபர், குழந்தையின் கைகளை உயர்த்தி தரையில் மண்டியிட வைத்த நிலையில், குழந்தை பசிக்காக உணவை கோரிய போது தந்தை கடுமையான வார்த்தைகளால் திட்டியதுடன் குழந்தையின் கால் ஒன்றை சைக்கிளின் முன் சக்கரத்தின் கீழ் வைத்து கொடூரமாக தாக்கியுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சந்தேகநபரான தந்தைஇ குழந்தையை கொடூரமாக நடத்தும் வீடியோக்களை வெளிநாட்டு தாய்க்கு அனுப்பியதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
குறித்த காணொளி சமூக வலைத்தளங்களில் பரவி வருவதை அவதானித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எல்பிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.