தனமல்வில பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அளுத்வெவ கந்த பிரதேசத்தில் 03 கஞ்சா தோட்டங்கள் கண்டு பிடிக்கப்பட்டு அழிக்கப்பட்டுள்ளதுடன் உரிமையானவர்கள் விசேட அதிரடிப்படை அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
20 பேர்ச்சஸ், 05 பேர்ச்சஸ், 20 பேர்ச்சஸ் ஆகிய இடங்களில் சட்டவிரோதமாக நடப்பட்ட சுமார் 12,000 கஞ்சா செடிகளை கொண்ட 3 தோட்டங்கள் இதன் போதுகண்டு பிடிக்கப்பட்டது.
இதன்போது 30 கஞ்சா செடிகள் மேலதிக விசாரணைகளுக்காக தனமல்வில பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன எஞ்சியிருந்த கஞ்சா செடிகள் அனைத்தும் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.