திருகோணமலை மாநகர சபையினால் மூதூர் பகுதியில் நிவாரண உதவிகள் வழங்கிவைக்கப்பட்டன.
திருகோணமலை மாநகர சபையினால் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண உதவிகள், மாநகர மக்களின் பங்களிப்புடன், New;W வியாழக்கிழமை மூதூர் பகுதியில் திருகோணமலை மாநகர முதல்வர் க.செல்வராஜா (சுப்ரா) அவர்களின் தலைமையில் வழங்கிவைக்கப்பட்டன.
மேலும், இந்த நிவாரண உதவிகள் மாநகர சபையின் உறுப்பினர்கள், ஆணையாளர், செயலாளர், உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் ஆகியோரின் ஒத்துழைப்புடன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரடியாக வழங்கப்பட்டுள்ளன.
நாளைய தினம் மாநகர சபையால் வெருகல் பகுதிக்கு நிவாரண உதவிகள்வழங்கப்படவுள்ளன.


