-கிண்ணியா நிருபர்-
ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான ரணில் விக்ரமசிங்கவிடமிருந்து ஐக்கிய தேசியக் கட்சியின் திருகோணமலை மாவட்ட தவிசாளராகவும், மூதூர் தொகுதி அமைப்பாளராகவும் முன்னாள் பிரதி அமைச்சர் அப்துல்லாஹ் மஹ்ரூப் நியமிக்கப்பட்டுள்ளார்.
குறித்த நியமனங்கள் உத்தியோகபூர்வமாக கொழும்பு 07ல் உள்ள அலுவலகத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தில் முதன்மை வேட்பாளராகவும் சிலிண்டர் சின்னத்திலும் ரணில் கூட்டணியில் போட்டியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அப்துல்லாஹ் மஹ்ரூப்,
சிறந்ததொரு தலைவனுக்கான உதாரணமாக ரணில் விக்ரமசிங்க விளங்குகிறார், முஸ்லிம் சமூகத்துக்காக குரல் கொடுத்தவர் இவரே, ரிசாட் பதியுதீன் சிறையில் அடைக்கப்பட்ட போதும் கூட பாராளுமன்றில் குரல் கொடுத்தவர், எனவே தான் நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும்.
ரிசாட் , ஹக்கீம் போன்றவர்கள் முஸ்லிம் சமூகத்தை ஏமாற்றி வருகின்றனர், அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இருக்கும் போது தனித்து போட்டியிட வேண்டும் என தெரிவித்த போது றிசாட் மறுத்தார், இதனால் வெளியேறி ரணிலுடன் இணைந்தேன்.
சஜீத் பிரேமதாசாவால் ஆட்சிக்கு வர முடியாது, ஏன் என்றால் 2019ல் போட்டியின் போது ஐக்கிய தேசிய கட்சியின் ரணிலின் வாக்கும் அங்கு இருந்தது, மூன்று தேர்தல்களில் இரு ஜனாதிபதி பொதுத் தேர்தலிலும் ஒரு பொதுத் தேர்தலிலும் தோல்வி கண்ட சஜீத் உடன் இணைந்து றிசாட் ஹக்கீம் ஏமாற்றுகிறார்கள்.
பெரும்பான்மை ஆசனத்தை 113ஐ இம் முறை இந்த அரசாங்கத்தால் பெற முடியாது எனவே தான் அநுர குமாரவுடன் இணைந்து எதிர்காலத்தில் தேசிய அரசாங்கம் ஊடாக ஆட்சி அமைந்தால் ரணில் விக்ரமசிங்கவே பிரதமராகலாம், என்றார்.