-ஏ.எச்.ஏ. ஹுஸைன்-
சுதந்திரமானதாகவும் நீதியானதாகவும் எதிர்வருகின்ற எல்லாத் தேர்தல்களையும் நடத்தி முடிப்பதற்கு நாட்டு மக்கள் அனைவரும் உதவ வேண்டும் என தேர்தல்கள் முன்னாள் ஆணையாளர் மஹிந்த தேஷப்பிரிய தெரிவித்தார்.
தேர்தல் கண்காணிப்புக்கான தன்னார்வ முயற்சி வியூவ் நிறுவனத்தின் வருடாந்தப் பொதுக் கூட்டம் கொழும்பு ஜே.ஆர். ஜெயவர்தன மத்திய நிலையத்தில் வெள்ளிக்கிழமை இடம்பெற்றபோது அவர் இதனைத் தெரிவித்தார்.
நிகழ்வில் பிரதம அதிதியாகவும் வளவாளராகவும் கலந்து கொண்ட முன்னாள் தேர்தல்கள் ஆணையாளரும் தற்போது தேர்தல் கண்காணிப்புக்கான தன்னார்வ முயற்சி வியூவ் நிறுவனத்தின் ஆலோசனைக் குழுத் தலைருமான மஹிந்த தேஷப்பிரிய, அங்கு ஊடக சந்திப்பொன்றை நடத்தினார்.
அடுத்த மாதம் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலை அமைதியாகவும் சிறப்பாகவும் சுதந்திரமானதாகவும் நீதியானதாகவும் நடத்துவற்குரிய அனைத்து முயற்சிகளையும் அனைவரும் எடுக்க வேண்டும். அதற்காக தேர்தல் கண்காணிப்புக்கான தன்னார்வ முயற்சி “வியூவ்” எனும் நிறுவனம் நாடளாவிய ரீதியில் கண்காணிப்பையும் விழிப்புணர்வையும் மேற்கொள்ளவுள்ளது. அதன் பணிகள் ஏற்கெனவே துவங்கி விட்டன. வாக்குரிமை என்பது கற்க, கற்காத ஆண்-பெண் வேறுகளைக் கடந்த இன மத குல மொழி பிரNடீதச வேறுபாடுகளின்றி அனைவருக்கும் கிட்டுகின்ற ஒரு உரிமையாகும். அதனால்அவ்வுரிமையை பொறுப்புடனும் சரியாகவும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.” என்றார்.
நிறைவேற்றுப் பிரதிப் பணிப்பாளர் மஹேஷிகா விமலரத்ன தலைமையில் கூட்டம் இடம்பெற்ற இந்தப் பொதுக் கூட்டம் மற்றும் ஊடக சந்திப்பின்போது ஜனநாயக சீர்திருத்தங்கள் மற்றும் தேர்தல் ஆய்வுகளுக்கான நிறுவனத்தின் தலைமை நிகழ்ச்சித் திட்ட அதிகாரி நிஷாரி அனுருத்திகா, தேர்தல் கண்காணிப்புக்கான தன்னார்வ முயற்சி “வியூவ்” நிறுவனத்தின்; தலைவர் ரவீந்திர த சில்வா பணிப்பாளர் குழு அங்கத்தவர்களான இஷாரா மதுவந்தி, அருள்நாயகம் தர்ஷிகா, எஸ். விஜிதரன், சமூக ஒருமைப்பாட்டு பங்களிப்பு அமையத்தின் செயலாளர் சானுக குமாரசிறி முறைப்பாட்டலகுத் தலைவர் ஏ.ஆர்.எம் பஸீம் உள்ளிட்டோரும் நாளாவிய ரீதியில் இருந்து தேர்தல் கண்காணிப்பு அலுவலர்களும் கலந்து கொண்டனர்.