கண்டியில் முன்பள்ளிக்கு செல்ல மறுத்த தமது மகளைத் தீக்காயங்களுக்கு உள்ளாக்கிய தாயொருவரை கண்டி காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
நாகஸ்தென்ன பகுதியில் வாடகை வீடொன்றில் தங்கியிருந்த 30 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
குறித்த தாய் கரண்டியை சூடாக்கி சிறுமியின் உடலில் தீக்காயங்களை ஏற்படுத்தியுள்ளமை விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
காயமடைந்த சிறுமி தற்போது கண்டி தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.