புதிய அமைச்சரவை முதன் முறையாக இன்று திங்கட்கிழமை கூடவுள்ளது.
ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையிலே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் அமைச்சரவை கூட்டம் இடம்பெறவுள்ளது.
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய மற்றும் அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோர் அமைச்சரவையைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர்.
இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தின் போது சில முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.