முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலை அதிகரிப்பு?

முட்டை ஒன்றின் விலை 50 ரூபா வரையில் அதிகரிக்கக்கூடும், என அகில இலங்கை கோழிப் பண்ணை சம்மேளனம் தெரிவித்துள்ளது.

மேலும், கோழி இறைச்சி கிலோ ஒன்றின் விலை 1,200 ரூபா வரையில் அதிகரிக்கக்கூடும் எனவும், கொழும்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அந்த சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார்.