மட்டக்களப்பு பாலமீன்மடு, லைட்ஹவுஸ் இளைஞர் கழகத்தின் 26வது நிறைவினை முன்னிட்டு ‘முகத்தூர் முழக்கம்’ மாபெரும் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி பாலமீன்மடு லைட்ஹவுஸ் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.
30 இளைஞர் கழகங்கள் பங்குகொண்ட இந்த சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டி கடந்த சனிக்கிழமை மாலை நடைபெற்றது.
லைட்ஹவுஸ் இளைஞர் விளையாட்டுக்கழக தலைவர் வி.ஹபிலன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், பிரதம விருந்தினராக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா சாணக்கியன் கலந்து கொண்டார்.
அத்துடன சிறப்பு விருந்தினர்கள், இளைஞர் கழக உறுப்பினர்கள், பொது மக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

