புத்தளம் கல்லடி பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மின்சார வேலியில் சிக்கி உயிரிழந்த நிலையில் யானை மீட்கப்பட்டுள்ளது.
8 அடி உயரமுடைய 30 வயது மதிக்கத்தக்க யானையே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த காட்டு யானை சட்டவிரோதமாக பொருத்தப்பட்டிருந்த அதிவலு கொண்ட மின்சாரக் கம்பியில் சிக்கி உயிரிழந்துள்ளதுடன் இது தொடர்பில் இருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு புத்தளம் நீதிமன்றத்தில் இன்று திங்கட்கிழமை முன்னிலைப் படுத்தப்பட்டனர்.
இதன்போது ஒருவர் குற்றத்தை ஒப்புக் கொண்டதாகத் தெரிவித்த நிலையில் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் மற்றுமொருவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் வனஜீவராசிகள் திணைக்கள கட்டுப்பாட்டுப் பிரிவினர் தெரிவித்தனர்.