24 வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற கொலைச் சம்பவம் ஒன்றில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட நபருக்கு காலி மேல் நீதிமன்றம் நேற்று புதன்கிழமை மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
2000 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 6 ஆம் திகதி அல்லது அதனை அண்மித்த தினத்தில் இமதுவ பிரதேசத்தில் மின்சாரத்தைப் பாய்ச்சி நபர் ஒருவரை கொலை செய்தமை தொடர்பில் காலி மேல் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டிருந்தன.
இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் காலி மேல் நீதிமன்ற நீதிபதி காவிந்த்யா நாணயக்கார குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்தார்.