மாவீரர் தின நிகழ்வுகளை ஊக்குவித்துப் பிரசாரம் செய்த குற்றச்சாட்டின் பேரில் மூன்று சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய ஒருவர் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவின் யாழ்ப்பாண உப பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அதேநேரம், கைதான ஏனைய இருவரில் ஒருவர் பத்தேகம பகுதியைச் சேர்ந்த 28 வயதுடையவர் எனத் தெரியவந்துள்ளது.
இன்று வெள்ளிக்கிழமை ஒருவர் கைது செய்யப்பட்டதாகவும், குறித்த நபர் மாவீரர் தின நிகழ்வுகளை ஊக்குவித்ததாகக் கூறப்படும் பேஸ்புக் கணக்கிற்கு உரித்துடையவர் எனவும், பொலிஸார் தெரிவித்துள்ளனர்.