-மன்னார் நிருபர்-
மாந்தை மேற்கு பிரதேசத்தில் உள்ள மூன்றாம் பிட்டி பகுதியில் நேற்று செவ்வாய்க் கிழமை மாலை கேரள கஞ்சாவுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மன்னார் தள்ளாடி இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில்
மன்னார் சிறப்பு அதிரடிப்படை அதிகாரிகளின் உளவுப் பிரிவினருடன் இணைந்து நடத்திய சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கையின் போதே இந்த கைது இடம்பெற்றுள்ளது.
இதன்போது குறித்த நபரால் விற்பனைக்காக பொதி செய்யப்பட்ட 12 லட்சம் பெறுமதியான 3 கிலோ 570 கிராம் கஞ்சா அவரது இல்லத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
குறித்த சந்தேக நபர் மற்றும் சான்றுப் பொருட்கள் மேலதிக விசாரணைகளுக்காக இலுப்பைக்கடவை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.