மாத்தளை – மடவலவுல்பத்த பகுதியில் 17 வயதுடைய மாணவர் ஒருவர் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்த நிலையில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மடவளை – நாலந்தவத்தை பகுதியைச் சேர்ந்த குறித்த மாணவர், நண்பர்கள் இருவருடன் மடவலவுல்பத்த பிரதேசத்திற்குச் நண்பர் ஒருவரினை காதலியைச் சந்திப்பதற்காகக் சென்றிருந்தபோது, காதலியின் தந்தை மற்றும் சகோதரர் உள்ளிட்ட குழுவினர் அவர்களைத் தாக்கியுள்ளனர்.
தாக்குதலில் காயமடைந்த மூன்று மாணவர்களும் நாலந்தவத்தை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், ஒருவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் 55 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.