பட்டிபொல மற்றும் ஒஹிய நிலையங்களுக்கு இடையிலான ரயில் பாதையில் இன்று வெள்ளிக்கிழமை பாரிய மரம் முறிந்து வீழ்ந்ததன் காரணமாக பதுளை கொழும்பு கோட்டை ரயில் சேவைக்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாக நாவலப்பிட்டி ரயில் கட்டுப்பாட்டு அலுவலகம் தெரிவித்துள்ளது.
பதுளையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த உடரட மெனிகே ரயிலை நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதாக ரயிலில் பயணித்த பயணிகள் தெரிவித்தனர்.
இதன் காரணமாக பதுளை கொழும்பு கோட்டை ரயில் தாமதமாகுமென ரயில் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்