நுவரெலியா மாவட்டத்தில் தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக ராகலை மாகுடுகலை பகுதியில் நேற்று வியாழக்கிழமை மரம் ஒன்று முறிந்து வீழ்ந்ததில் ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக ராகலை பொலிஸார் தெரிவித்தனர்.
மஸ்கெலியாவை பிறப்பிடமாகவும் திருமணத்தின் பின்னர் மனைவியுடன் கந்தப்பளை ஹைபோரஸ்ட் இலக்கம் ஒன்றில் வசித்து வந்த கந்தசாமி ராஜ்குமார் (வயது – 38) என்ற ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிர் இழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் உடற்கூற்று சோதனைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ராகலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்