-மன்னார் நிருபர்-
மன்னார் மாவட்டத்தில் தீவுப்பகுதி உள்ளடங்களாக முருங்கன்,பேசாலை,மாந்தை,முசலி உட்பட பல்வேறு பகுதிகளில் நீண்ட நாட்களுக்கு பின்னர் இன்று வியாழக்கிழமை மழை பெய்துள்ளது
கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக தொடர்ச்சியாக நிலவி வந்த அதி உஷ்ணமான காலநிலை காரணமாக அதிகளவான வெப்பம் மற்றும் வறட்சி மன்னார் மாவட்டத்தில் நிலவி வந்த நிலையில் இன்றைய தினம் கடும் மழை பெய்துள்ளது டன் தொடர்ச்சியாக மழையுடன் கூடிய காலநிலை காணப்படுகிறது.
அதே நேரம் வறட்சி காரணமாக உருவாகியிருந்த பீடை தாக்கமும் மழை காரணமாக குறைவடையும் என நம்பப்படுகிறது