
மன்னார் அஞ்சல் பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் முன்னெடுப்பு
-மன்னார் நிருபர்-
கொழும்பில் ஒருங்கிணைந்த தபால் சங்கம் ஏற்பாடு செய்த தொழிற்சங்க போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து மன்னார் அஞ்சலகம் சார்பாக இன்று திங்கட்கிழமை மதியம் 12 மணி முதல் 1 மணி வரை போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
குறித்த போராட்டம் மன்னார் அஞ்சலகத்திற்கு முன்பாக இடம்பெற்றது. குறித்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர்.
சம்பள முரண்பாடு தீர்த்தல்இவாழ்க்கைச் செலவாக 20 ஆயிரம் ரூபாவை உயர்த்தல்இபதவி உயர்வை வழங்கல், வெற்றிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து குறித்த போராட்டம் மன்னார் அஞ்சலகத்திற்கு முன் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்