நுவரெலியா – கண்டி பிரதான வீதியின் கொத்மலை கெரன்டிஎல்ல பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை அரச பேருந்து ஒன்று பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21ஆக அதிகரித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தார் .
மேலும் படுகாயமடைந்தவர்கள், நுவரெலியா, கம்பளை, நாவலப்பிட்டிய உள்ளிட்ட வைத்தியசாலைகளுக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விபத்தில் 35க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்
இந்நிலையில், விபத்தில் படுகாயமடைந்த 15 பேர் மேலதிக சிகிச்சையைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் இதில் இரண்டு சிறுவர்கள் அடங்குவதாக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் மகேந்திர சேனவீரட்ட தெரிவித்தார் .
கதிர்காமத்திலிருந்து நுவரெலியா வழியாக குருநாகல் நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தே இந்த விபத்திற்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.