-பதுளை நிருபர்-
பதுளை – ரிதிமாலியத்த, இக்கிரிய, யல்வல பிரதேசத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை வீட்டினுள் புகுந்து தாக்க முயன்ற நபரை வீட்டின் உரிமையாளர் தாக்கியதில் அவர் உயிர் இழந்துள்ளார்.
மஹியங்கனை பெதியாகொட, பகதியை சேர்ந்த 28 வயதுடைய நபரே இவ்வாறு உயிர் இழந்துள்ளார்.
தாக்குதல் நடத்திய நபர் சமுர்தி சங்கவர்தன அதிகாரி எனவும் குறித்த வீட்டில் அவரும் அவரது உடல் நலம் பாதிக்கப்பட்ட மனைவியும் வாழ்ந்து வந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் குறித்து மேலும் தெரிய வருகையில்,
உயிரிழந்த நபர் இன்று அதிகாலை 12.10 மணியளவில் வீட்டின் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே வந்து வீட்டின் உரிமையாளரை தாக்க முற்பட்ட வேளையிலேயே வீட்டில் இருந்த உலக்கையினால் அவர் குறித்த நபரை பதிலுக்கு தாக்கிய போது குறித்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
வீட்டின் உரிமையாளரின் மகளுக்கும் மரணித்த நபருக்கும் இடையிலான காதல் தொடர்பே குறித்த நபர் வீட்டுக்குள் பிரவேசித்தமைக்கான காரணம் என தெரியவந்துள்ளது.
சந்தேக நபர் ரிதிமாலியத்த பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளை ரிதிமாலியத்த பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.