மது போதையில் தனது மனைவியை தாக்கிய சகோதரனை கல் மற்றும் கோடரியால் தாக்கி கொலை செய்த கணவர் தெஹியோவிட்ட பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தெஹியோவிட்ட பிரதேசத்தைச் சேர்ந்த 42 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதுடன் 43 வயதுடையவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவர் மது போதையில் வீட்டிற்கு வந்து தனது சாகோதரியை தாக்கியுள்ளார். இதனை அவதானித்த அவரது கணவர் மனைவியின் சகோதரனை கோடாரி மற்றும் கல்லால் பலமாக தாக்கியதில் தாக்குதலுக்குள்ளானவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தெஹியோவிட்ட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.