அனுராதபுரம் மின்னேரியா பகுதியில் கணவனின் மோசமான செயற்பாட்டினை தாங்கிக் கொள்ள முடியாத மனைவி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
குறித்த நபர் மனைவி நீராடிக் கொண்டிருந்த போது எடுத்த அந்தரங்க புகைப்படத்தை உறவினர்களுக்கு அனுப்பி வைத்துள்ளதாக பொலிஸ் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் மின்னேரியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.