கண்டி – தெல்தெனிய, தன்னலந்த பகுதியில் இன்று புதன் கிழமை காலை வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து விழுந்ததில் பாடசாலை மாணவன் ஒருவர் உயிரிழந்தார்.
இந்த சம்பவத்தில் 16 வயதுடைய மாணவன் ஒருவரே உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை மண்மேடு சரிந்ததில் வீடு முற்றாக நீரில் மூழ்கியுள்ளது.
கண்டி அனர்த்த முகாமைத்துவ பிரிவினர் மண்மேட்டை அகற்றும் பணியை தற்போது ஆரம்பித்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.