-யாழ் நிருபர்-
கிளிநொச்சியில் இருந்து சட்டவிரோதமாக மணல் ஏற்றிவந்த டிப்பரை மடக்கிப் பிடிக்க முயற்சித்த சாவகச்சேரி பொலிஸாருக்கு, வீதியில் சென்ற கார் இடையூறு விளைவித்தது.
தர்மபுரம் – கல்லாறு பகுதியில் இருந்து நேற்று செவ்வாய்க்கிழமை இரவு சட்டவிரோதமாக மணலை ஏற்றிவந்த டிப்பரை சாவகச்சேரி பொலிஸார் துரத்திச் சென்றனர்.
இதன்போது பொலிஸாரது வாகனத்திற்கும், மணல் ஏற்றிவந்த டிப்பருக்கு இடையே குறுக்காக வீதியில் பயணித்த கார் டிப்பரை தப்ப வைக்க முயற்சித்தது.
இந்நிலையில் அந்த டிப்பர் வீதியில் மணலை கொட்டிவிட்டு தப்பிச் சென்றது. குறித்த காருக்கும் மணல் ஏற்றிச் சென்ற டிப்பருக்குமிடையே தொடர்பு காணப்படும் என சந்தேகிக்கப்படுகிறது.
மேலும் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.