மணமகன் இல்லை: தன்னையே திருமணம் செய்துகொண்ட பெண்

பிரித்தானிவை சேர்ந்த சாரா வில்கின்ஸன் (வயது – 42) தமது வருங்கால கணவரை சந்திக்காத நிலையில் கடந்த 20 ஆண்டுகளாக அவர் தமது திருமண விழாவுக்காக சேமித்த பணத்தினை பயன்படுத்தி விமரிசையாக தன்னை தானே திருமணம் செய்து கொண்டுள்ளார்.

விழாவுக்கு ஏற்பாடு செய்து, மோதிரம் வாங்கி, தமது திருமண விழாவை நண்பர்களுடனும் உறவினர்களுடனும் அவர் கொண்டாடினார்.

மணமகன் இல்லாததால் அது அதிகாரபூர்வ திருமணம் இல்லையென்றாலும், திருமண விழாவைக் கொண்டாடியதில் மகிழ்ச்சி என்று சாரா கூறினார்.

மொத்தம் 10,000 பவுண்டு செலவில் திருமணம் நடந்தேறியது.

விருந்தினர்கள் அனைவரும் சாராவுடன் கொண்டாடி மகிழ்ந்தனர். இதெல்லாம் சாராவுக்குத்தான் சாத்தியம் என்று எண்ணி எண்ணி விருந்தினர்கள் மகிழ்ந்து போயுள்ளனர்.