மட்டக்களப்பு இந்துக்கல்லூரி பாடசாலையின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப்போட்டி இன்று செவ்வாய்க்கிழமை பி.ப 3 மணியளவில் இந்துக்கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றது.
மட்/இந்துக்கல்லூரியின் அதிபர் கே.பகிரதன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மாணவர்களின் சுவட்டு நிகழ்ச்சிகள், உடற்பயிற்சி கண்காட்சி என்பன இடம்பெற்றது.
மேலும் நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாநகர சபை ஆணையாளர் என்.தனஞ்சயன் கலந்துகொண்டார்.
மேலும் சிறப்பு அதிதியாக வலையக்கல்வி கணக்காளர் திருமதி பி.சுகீஸ்வரன், மற்றும் வலையகல்வி உதவி பணிப்பாளர் திருமதி.என்.மகேந்திர குமார், கௌரவ விருந்தினராக உடற்கல்வி பணிப்பாளர் வி.லவக்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.