– எஸ்.ஞானச்செல்வன் –
மட்டக்களப்பு விமானநிலையத்தில் தீவிபத்து என சமூக ஊடகங்கள் மூலம் பரப்பட்ட செய்தி முற்றிலும் தவறான தகவல் என, விமானநிலைய அதிகாரி ஒருவர் எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார்.
விமான நிலையத்திற்கு அருகில் குப்பை எரிவூட்டப்பட்டதை வைத்து மக்களை தேர்தல் காலத்தில் பீதியடையும் நோக்கில் சிலர் சமூக ஊடகங்களில் இதை பதிவிட்டுள்ளதாகவும் , இவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.