வாழைச்சேனை – கூழாவடிச்சேனை பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு கூரிய ஆயுதமொன்றினால் தாக்கப்பட்டு பெண்ணொருவர் உயிரிழந்தார்.
பொலிஸ் ஊடகப்பிரிவினர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த பெண் கூழாவடிச்சேனை – வாகனேரி பகுதியைச் சேர்ந்த 48 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த பெண்ணின் மருமகன், தனிப்பட்ட பிரச்சினை காரணமாக அவரை கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தநிலையில், குறித்த சந்தேகநபர் கடந்த 10ஆம் திகதி உயிரிழந்த பெண்ணின் கணவரையும் கொலைச் செய்துள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
பின்னர் அவர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்தநிலையில், தற்போது சந்தேகநபர் தப்பியோடியுள்ளதாகவும், அவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பொலிஸ் முன்னெடுத்து வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.