-மட்டக்களப்பு நிருபர்-
மட்டக்களப்பு பாலமீன்மடு பிரதேச வைத்தியசாலையில் நோயாளர் பாதுகாப்பு மற்றும் சுகாதார தகவல் மையம் ஆகியவற்றை நேற்று சனிக்கிழமை மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் எஸ். முரளீஸ்வரன் திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் பாலமீன்மடு பிரதேச வைத்தியசாலை பொறுப்பதிகாரி வைத்தியர் சிங்கராஜா இனியன், வைத்திய அதிகாரிகள், தாதியர்கள், பணியாளர்கள்,பிரதேச வாழ் பொது மக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
இந்நோயாளர் பாதுகாப்பு மற்றும் சுகாதார தகவல் மையம் முதல் தடவையாக மட்டக்களப்பு மாவட்டத்தில் திறந்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இம்மையத்தில் நோயாளர்களுக்குத் தேவையான அறிவுரைகள் மற்றும் ஆலோசனைகள், நோய்களைப் பற்றிய விளக்கங்களைப் பெற்றுக் கொள்ளலாம்.