-மட்டக்களப்பு நிருபர்-
சபாபதி உடையார் குடும்பத்தினர் மற்றும் கே.ஓ.வீ. குடும்பத்தினர் ஆகியோரின் நிதிப் பங்களிப்பில் மட்டக்களப்பு சிவானந்தா தேசிய பாடசாலை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ரெனிஸ் கோட் கல்லடி ஸ்ரீ இராமகிருஷ்ணமிஷன் பொது முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்தஜீ மகராஜ் இன்று வியாழக்கிழமை வைபவ ரீதியாகத் திறந்து வைக்கப்பட்டது.
பாடசாலை அதிபர் எம்.தயாபரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்,மண்முனை வடக்குப் பிரதேச செயலாளரும்,சிவானந்தா பழைய மாணவர் சங்கத் தலைவருமான வீ.வாசுதேவன்,சபாபதி உடையார் குடும்பத்தினர் மற்றும் கே.ஓ.வீ. குடும்பத்தினர்,மட்டக்களப்பு இந்துக் கல்லூரி அதிபர் எஸ்.பகீரதன்,பாடசாலை ஆசிரியர்கள்,மாணவர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது சுமார் 24 இலட்சம் செலவில் நிர்மாக்கப்பட்ட ரெனிஸ் கோட் திறந்து வைக்கப்பட்டதோடு,அதிதிகளால் இதன் ஞாபகார்த்தமாக பயன்தரு மரக்கன்றுகளும் நடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
