மட்டு – கிண்ணையடி மகா விஸ்ணு வழி வீதி காவடி பாடல் இறுவெட்டு வெளியீடு

மட்டக்களப்பு வாழைச்சேனை கிண்ணையடி ஸ்ரீ மகா விஷ்ணு ஆலயத்தின் மேல் பாடப்பட்ட கிண்ணையடி மகா விஸ்ணு வழி வீதி காவடி பாடல் இறுவெட்டு வெளியீடு நேற்று ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது.

கிழக்கிலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்க ஆலயங்களில் ஒருங்கே அமையப்பெற்ற வாழைச்சேனை கிண்ணையடி , ஸ்ரீ மகா விஸ்ணு மீது கொண்ட பற்றும். கிண்ணையடியை பிறப்பிடமாக கொண்ட கவிஞர் மயில்வாகனம் ஸ்ரீ பிரஹாஸினால் உருவாக்கப்பட்ட பாடல் வரிகளுக்கு , இசை ஒலியாக்கம் னுவுளு படைப்பாகம் மண்டூர், இசையமைத்துப் பாடப்பட்ட மகா விஸ்ணு வழி வீதி காவடி பாடல் இறுவெட்டு வெளியீட்டு நிகழ்விற்கு பிரதம அதிதியாக கிண்ணையடி அயல் கிராம ஆலயங்களின் தலைவர்கள் , கலந்துகொண்டு இறுவெட்டினை வெளியிட்டு வைத்தனர்.

கிண்ணையடி ஸ்ரீ மகா விஸ்ணு ஆலய செயலாளர் மு.கோகிலதாசன் தலைமையில் இடம்பெற்ற இறுவெட்டு வெளியீட்டு நிகழ்வு மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமாகியதனைத் தொடர்ந்து, ஸ்ரீ விஸ்ணு ஆலய பிரதம குரு சிவஸ்ரீ க. ஜெயசீலன் குருக்களின் இறுவெட்டு வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது.