மட்டக்களப்பு காத்தான்குடி பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் பாடசாலை மாணவன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
காத்தான்குடி சந்தை வீதி, தொகுதி 5 இல் வசித்து வந்த 10ஆம் தரத்தில் கல்வி பயிலும் மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
தனது இல்லத்திற்கு முன்னால் உள்ள சிறிய வீதி ஒன்றில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிள் திடீரென சறுக்கி கீழே விழுந்ததால் நெஞ்சு பகுதியில் அடிப்பட்டதால் மரணம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்த மாணவனின் சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
