மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பொலிஸ்பிரிவுக்குட்பட்ட செட்டிபாளையம் பகுதியில் இன்று வியாழக்கிழமை அதிகாலை வாகன விபத்து இடம்பெற்றுள்ளது.
மட்டு கல்முனை பிரதான வீதியூடாக கல்முனையிலிருந்து மட்டக்களப்பு நோக்கி மரக்கறிகளை ஏற்றிக்கொண்டு பயணித்த டிப்பர் வாகனம் செட்டிபாளையம் பகுதியில் வீதியை விட்டு விலகி தொலைத்தொடர்பு வலயமைப்பின் கொங்கிறிட் தூணுடன் மோதி விபத்துக்குள்ளானது.
விபத்தின் போது டிப்பரில் இருவர் பயணித்திருக்கின்ற நிலையில் அவர்களுக்கு பாதிப்புக்கள் ஏற்படவில்லை என்பதுடன் டிப்பரின் முன்பகுதி பலத்த சேதமடைந்துள்ளது.
விபத்து தொடர்பான விசாரணைகளை களுவாஞ்சிகுடி போக்குவரத்து பொலிஸார் முன்னெடுத்துச் செல்கின்றனர்