-மட்டக்களப்பு நிருபர்-
மட்டக்களப்பு கல்லடி சிவானந்தா வித்தியாலய பழைய மாணவர் சங்கம் நடாத்திய பழைய மாணவர் அணிகளுக்கிடையிலான விளையாட்டுப் போட்டி நேற்று ஞாயிற்றுக்கிழமை கல்லடி உப்போடை சிவானந்தா வித்தியாலய மைதானத்தில் இடம்பெற்றது.
பழைய மாணவர் சங்கத் தலைவரும்,பழைய மாணவர் சங்கத் பிரித்தானிய கிளைப் போசகர் வைத்தியர் பாலசுப்பிரமணியம்,மண்முனை வடக்குப் பிரதேச செயலாளருமான வீ.வாசுதேவன் தலைமையில் நடைபெற்ற விளையாட்டு விழாவில்,மட்டக்களப்பு கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் ரி.ஹரிகரராஜ்,கல்குடா வலயக் கல்விப் பணிப்பாளர் எஸ்.அனந்தரூபன்,முன்னாள் கல்விப் பணிப்பாளர் க.பாஸ்கரன்,சிவானந்தா விளையாட்டுக் கழகத் தலைவர் எஸ்.ஜெகன்,மட்டக்களப்பு மாவட்டக் கிரிக்கெட் சங்கத் தலைவர் வி.பிரதீபன்,சகுந்தலா பாலசுப்பிரமணியம்,பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது பழைய மாணவர் சங்க அணிகளுக்கிடையே கிரிக்கெட்,கரப்பந்து மற்றும் கயிறிழுத்தல் போட்டிகள் நடைபெற்றது.