-மட்டக்களப்பு நிருபர்-
1982 ஆம் ஆண்டு முதல் 2002 ஆம் ஆண்டு வரை இசை நடனக் கல்லூரியில் பயின்ற மாணவிகளின் ஒழுங்கு படுத்தலில் “ஆசான்களுக்கான அணிசேர் கௌரவமளித்தல்” நிகழ்வு மட்டக்களப்பு கல்லடி உப்போடை இராமகிருஷ்ணமிஸன் விபுலானந்தர் மணி மண்டபத்தில் நேற்று முன்தினம் சனிக்கிழமை இடம்பெற்றது.
பட்டிருப்பு கல்வி வலய சேவைக்கால ஆசிரிய ஆலோசகர் திருமதி டேசிராணி இராசகுமாரன் தலைமையில் நிகழ்வு நடைபெற்றது.
இந்நிகழ்வில், முதன்மை அதிதியாக கிழக்கு பல்கலைக்கழக இந்து நாகரீகத்துறை பேராசிரியர் கலாநிதி சாந்தி கேசவனும், சிறப்பு அதிதிகளாக மண்முனை வடக்குப் பிரதேச செயலாளர் வீ.வாசுதேவன் மற்றும் மண்முனை தென் எருவில்பற்றுப் பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரெத்தினம் ஆகியோர் கலந்து கொண்டனர்.