மட்டக்களப்பு – வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் உள்ள செம்மண்ணோடை, கொண்டயன்கேணி பிரதேசத்தில் இன்று வியாழக்கிழமை அதிகாலை ஒரு மணியளவில் திடீரென ஏற்பட்ட தீ காரணமாக மர வேலைத்தளம் முற்றாக எரிந்து சேதமாகியுள்ளது.
ஹயாத்து முஹம்மது ஐயூப் என்பவருக்குச் சொந்தமான கட்டடத்தில் இயங்கி வந்த முஹம்மது முஜீப் என்பவரின் வேலைத்தளத்திலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அதிகாலை வேளை ஏற்பட்ட தீயை அயலவர்களின் உதவியுடன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடிந்தாலும் வேலைத்தளத்திலுள்ள பல இலட்சம் பெறுமதியான உபகரணங்கள், மரத்தளபாடங்கள், மர குற்றிகள் என்பன தீயில் கருகியுள்ளன.
தீச்சம்பவத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்பதுடன், சம்பவம் தொடர்பில் வாழைச்சேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்