மட்டக்களப்பு மாணவனின் மரணத்திற்கு யார் காரணம் ? ஒலிப்பதிவுகள் இணைக்கப்பட்டுள்ளன

சுவிட்சர்லாந்திலிருந்து  -ச.சந்திரபிரகாஷ்-

மட்டக்களப்பில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் உயர் தரம் கற்கும் மாணவனின் உயிரிழப்பு பல்வேறு சந்தேகங்களையும் அதேவேளை மாவட்ட கல்வி அதிகாரிகள்  , ஆசிரியர்கள் மீது சேறுபூசும் நடவடிக்கையிலும் சமூக ஊடகங்களில் பதிவுகள் உள்ள நிலையில் ஊடகம் என்ற முறையில் உண்மைகளை வெளிக்கொண்டு வருவது எமது தார்மீக கடமையாகும்.

மட்டக்களப்பு மட்டிக்களி பகுதியை சேர்ந்த சுதாகரன் வர்ஷனன் (வயது 19) என்பவரே இவ்வாறு கடந்த வெள்ளிக்கிழமை நச்சு (அலறி)விதையை உட்கொண்டு உயிரிழந்துள்ளார். இவருடைய இறுதிக்கிரிகைகள் இன்று ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பில் இடம்பெற்றுள்ளது.

மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியில் உயர்தர வகுப்பில் உயிரியல் பிரிவில் கல்வி கற்கும் மாணவனின் மரணத்திற்கு பிண்ணனியில் எந்தவொரு கல்வி அதிகாரிகளின்  அழுத்தங்களும் இல்லை என்பது எமக்கு இதுவரை கிடைத்துள்ள தகவல்கள் மூலம் தெரியவருகின்றது.  இருந்த போதிலும் இதன் பின்னணி குறித்து வெயிட முயற்சிக்கின்றோம்.

இந்த சம்பவம் குறித்து வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி சுஜாதா குலேந்திரகுமார் மீது சமூக ஊடகங்களில் சேறுபூசும் நடவடிக்கையில் சிலரின் பொறுப்பற்ற முறையிலான பதிவுகள் உள்ள நிலையில் எமது ஊடகம் சார்பாக வலயக்கல்விப் பணிமனைக்கு சென்றிருந்த போது .

இந்தநிலையில் உயிரிழந்த மாணவனின் உடல்களில் தந்தையால் தாக்கப்பட்ட அடையாளங்கள் இருந்ததாகவும், படிப்பு விடயத்தில் பெற்றோர் அதிக அழுத்தங்களை மாணவன் மீது திணித்ததாக ,  சிலபதிவுகளில் காணக்கூடியதாக இருந்தது.

பிள்ளைகளின் கல்வியில் பெற்றோர் , ஆசிரியர்கள் மற்றும் கல்வி அதிகாரிகள் அக்கறை காட்டுவது தவறாக இன்றைய சமூக ஊடகங்களில் உள்ள சில இளம் சமூகத்தினரின் பதிவுகளாக உள்ளதை இன்று காணக்கூடியதாகவுள்ளது.

 

 

உயிரிழந்த மாணவனுக்கு ஒரு இளைய சகோதரர் மட்டும் உள்ள நிலையில் பொற்றோர் விடுமுறை நாட்களில் பல்வேறு இடங்களுக்கும் தமது பிள்ளைகளை அழைத்துச் சென்று விடுமுறைகளை சந்தோசமாக கழித்து வந்துள்ள நிலையில், தகப்பனால் இந்த மாணவன் உடல் ரீதியாக துன்புறுத்தலுக்கு உள்ளானதாக வெளியியுள்ள குற்றச்சாட்டு தொடர்பாக,   மாணவனின் மரணம் தொடர்பாக விசாரணைகளை நடத்திய திடீர் மரண விசாரணை அதிகாரியான தம்பிப்பிள்ளை தவக்குமாரின் பதில் இவ்வாறு இருந்தது….

 

 

இதுஒருபுறமிருக்க பெற்றோர் ஆசிரியர் கூட்டத்திற்கு மாணவன் அச்சம் காரணமாக சமூகமளிக்காது வீட்டிலிருந்த நிலையில் பாடசாலையில் கூட்டம் இடம்பெற்றுக் கொண்டிருந்த போது மீண்டும் வீட்டிற்கு சென்று மாணவனை வலுக்கட்டாயமாக அழைத்து வந்தது , முயற்சித்தமையே இந்த விபரீதம் இடம்பெற காரணமாக அமைந்ததாக சக மாணவர்களின் கருத்தாகவுள்ள நிலையில் இதன் உண்மைத்தன்மை குறித்து பெற்றோரிடம் கேட்டாலே அறிய முடியும்.

இந்தநிலையில் மாணவனின் மரணம் தொடர்பாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் சட்டவைத்திய அதிகாரியின் பிரேத பரிசோதனை அறிக்கையை பெற்றுக்கொள்ள முயன்றபோதும் இன்று ஞாயிற்றுக்கிழமை முடியவில்லை.

 

பெருபாலும்  மாணவனின் இந்த முடிவு முட்டாள்தனமானது என்று சொல்லப்பட்டாலும்,  மேலும் சிலர் கல்விச்சமூகமே இதற்கு காரணம் என குற்றஞ்சாட்டுகின்றனர்.  இன்னொருபக்கம் பெற்றோரின் தவறு  என சுட்டிக் காட்டப்படுகின்றது.

இருந்த போதிலும் , மாணவனின் மரணத்திற்கு பொறுப்பு கூறும் விடயத்தில் பாடசாலை நிர்வாகம் , வலயக் கல்வி பணிமனை மற்றும் சம்பந்தப்பட்ட நிர்வாகத்தினர் துரிதகதியில் செயற்படவேண்டும் என, பாடசாலையில் பழைய மாணவர்கள், மாணவர்கள் , மற்றும் பொதுமக்களின் வேண்டுகோளாக உள்ளது.

பாடசாலையில் இடம்பெற்ற இச்சம்பவம் குறித்து அதிபரின் கருத்தை பெற்றுக்கொள்ள அவருடைய கையடக்க தொலைபேசியுடன் கடந்த இருதினங்களாக எவ்வித தொடர்புகளையும் ஏற்படுத்த முடியவில்லை .

இச்சம்பவம் தொடர்பாக சமூக ஊடகங்களில் பல்வேறு விதமான பதிவுகள் வெளியாகி உள்ள நிலையில் , அதிபருடைய பதிலை மிகவிரைவில் வெளியிடும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளோம்…..அதுவரை எம்மோடு இணைந்திருங்கள்.

 

மட்டக்களப்பில் உயர் தரம் கற்கும் மாணவன் உயிரிழப்பு
மட்டக்களப்பில் உயர் தரம் கற்கும் மாணவன் உயிரிழப்பு