மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக எல்லைக்குள் வசிக்கும் குடும்பங்களுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகம் இன்று வியாழக்கிழமை காலை கல்லடி சிவானந்தா விளையாட்டு மைதானத்தில் மற்றும் மட்டகளப்பு இந்து கல்லூரி மைதானம் ஆகிய இரண்டு இடங்களில் வழங்கப்படும்.
எனவே, எரிவாயு வழங்கும் செயற்பாடானது கிராம அலுவலகர் பிரிவின் ஊடாக வழங்கப்பட்ட குடும்ப அட்டையின் அடிப்படையில் மட்டக்களப்பு (மண்முனை வடக்கு) எல்லைக்குள் வசிப்பவர் என உறுதிப்படுத்தப்பட்டு முதலில் வந்தவருக்கு முன்னுரிமை அடிப்படையில் ஒருவருக்கு ஒரு எரிவாயு வழங்கப்படும்.
கல்லடி சிவானந்தா விளையாட்டு மைதானத்தில் 700 எரிவாயு சிலிண்டர்கள், மட்டக்களப்பு இந்து கல்லூரி மைதானத்தில் 1200 எரிவாயு சிலிண்டர்கள் பகிர்ந்தளிக்கப்படும்.
இன்று வழங்கப்படாதவர்களுக்கு எரிவாயு சிலிண்டர்கள் எதிர்வரும் நாட்களில் விநியோகிக்கப்படும்.
எரிவாயு சிலிண்டர்கள் விலை
12.5kg 5217ரூபா
5kg 2156ரூபா
2kg 1069ரூபா