மட்டக்களப்பு- பாசிக்குடா கடலில் நீராக்கொண்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குருணாகல் பொலிஸ் நிலையத்தின் குருணாகல் வைத்தியசாலை பொலிஸ் பிரிவில் கடமையாற்றி வரும் பொலிஸ் உத்தியோகத்தர் அவரது குடும்பத்துடன் மட்டக்களப்பு பாசிக்குடாவுக்கு சுற்றுலா வந்துள்ளார்.
இந்நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1.30 மணியளவில் பாசிக்குடா கடலில் நீராடிக் கொண்டிருந்த போது கடல் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
சடலம் மீட்கப்பட்டு வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது.
குருநாகல்-தெமட்டலுவ பிரதேசத்தைச் சேர்ந்த ஹித்தனதுரயலகே ஜெயவர்தன (வயது 57) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.










