மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஜெயந்திபுரத்தில் மின்சாரம் தாக்கி இருவர் உயிரிழந்துள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது.
வீடொன்றின் மேலே ஏறி நின்று திருத்தவேலை செய்து கொண்டிருந்த வேளை மின்சாரம் தாக்கியதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜெயந்திபுரத்தை சேர்ந்த 4 பிள்ளைகளின் தந்தையான வெள்ளையன் மகேந்திரன் மற்றும் மட்டக்களப்பு நகர் பகுதியை சேர்ந்த கந்தையா மகேந்திரன் ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
வெள்ளையன் மகேந்திரன் என்பவரின் நான்கு பிள்ளைகளில் ஒருவர் கடந்த 2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
சம்பவம் தொடர்பான விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.










