கண்டி – மகியங்கனை பிரதான வீதியின் ஹசலக, பாலம் சந்திக்கு அருகில் இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி கவிழ்ந்ததில் 22 பேர் காயமடைந்துள்ளனர்.
குறித்த விபத்து இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விபத்தில் காயமடைந்த 22 பேரும் மகியங்கனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.










