புத்தளம் – கொழும்பு பிரதான வீதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை கார் ஒன்றும் கொள்கலன் லொறி ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
இன்று காலை பத்துலுஓயா பகுதியில் பயணித்த கார் ஒன்று எதிரே வந்த கொள்கலன் லொறியுடன் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்து இடம்பெற்றபோது காரில் பயணித்த இருவருமே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.










