கேஸ்பேவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது, 75 லீற்றர் சட்டவிரோத மதுபானத்துடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று சனிக்கிழமை காலை கிடைத்த தகவலின் அடிப்படையில், வலான மத்திய ஊழல் ஒழிப்பு அதிரடிப் படையினர் சுற்றிவளைப்பு நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.
இதன்போது, 100 போத்தல்களுக்குச் சமமான 75 லீற்றர் சட்டவிரோத மதுபானம் கைப்பற்றப்பட்டதுடன், சந்தேகநபரும் கைது செய்யப்பட்டு கேஸ்பேவ பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் கேஸ்பேவ பகுதியைச் சேர்ந்த 46 வயதுடையவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கேஸ்பேவ பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.










