கிளிநொச்சி – தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பில், சந்தேகத்துக்கிடமாக நடமாடிய ஒருவரை பொலிசார் சோதனையிட்ட போது, குறித்த சந்தேக நபரிடமிருந்து ஹெரோயின் இரண்டு கிராம் 37 மில்லி கிராம், ஐஸ் ஒரு கிராமம் 93 மில்லி கிராமம், 22 போதை மாத்திரைகள், கைத்தொலைபேசி ஒன்று மற்றும் 700 ரூபாய் பணம் ஆகியவற்றை மீட்டனர்.
சந்தேக நபரை கிளிநொச்சி நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தர்மபுரமட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்










