மட்டக்களப்பு – களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பட்டாபுரம் கிராமத்தில் அமைந்துள்ள நீர் நிலையிலிருந்து சடலம் ஒன்று இன்று வியாழக்கிழமை பகல் மீட்கப்பட்டதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.
பட்டாபுரம் கிராமத்தைச் சேரந்த 4 பிள்ளைகளின் தந்தையான சேதுநாதபிள்ளை (வயது – 54) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மீன் பிடிப்பதற்காக இன்று அதிகாலை அவரது வீட்டிலிருந்து குறித்த நபர் புறப்பட்டுள்ளார். மீன் பிடிக்கச் சென்றவர் நீண்ட நேரமாக வீடு திரும்பாததால் உறவினர்கள் தேடிச் சென்றுள்ளனர். இந்நிலையிலேயே அவர் நீர் நிலையில் உயிரிழந்த நிலையில் வீழ்ந்து கிடப்பதை அவதானித்துள்ளனர்.
இதேவேளை களுவாஞ்சிக்குடி பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்